இலால்குடி, ஆக. 3– வி.சி.வில்வம் எழு திய “கொள்கை வீராங்க னைகள்” நூல் அறிமுக விழா, 27.07.2025 அன்று இலால்குடி பெரியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் மாவட்ட கழகக் காப்பாளர் ப.ஆல்பர்ட் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், திராவிட தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாநில மகளிரணி துணைச் செயலாளர் க.அம்பிகா, இலால்குடி மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் க.ஆசைத்தம்பி, ஒன்றியத் தலைவர் சி.பிச்சைமணி, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீ.அன்புராஜா, துணைச் செயலாளர் மு.செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.முத்துச் சாமி, ந.தர்மராஜ், இளைஞரணி தலைவர் ச.இசைவாணன், மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர் மு.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“கொள்கை வீராங்கனைகள்’
“கொள்கை வீராங்க னைகள்” நூல் குறித்த அறிமுக உரையை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்த்தினார். வீராங்க னைகளுக்குச் சிறப்புச் செய்து பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை பாராட்டுரை வழங்கினார். மாநில மாணவர் கழக துணை செயலாளர் தேவ.நர்மதா சிறப்புரை ஆற்றினார். இயக்க மகளிரை நேர்காணல் செய்த வி.சி.வில்வம் ஏற்புரை வழங்கினார் .
முன்னதாக கொள்கை வீராங்கனைகள் நூலை இரா.ஜெயக்குமார் அறிமுகம் செய்து வெளியிட்டார். இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, பெருவளப்பூர் சி.லீலா, இலால்குடி வா.குழந்தை தெரசா, புதுக்கோட்டை சு.தேன்மொழி, மத்து மடக்கி இரா.இந்திராகாந்தி, தஞ்சாவூர் க.மலர்க்கொடி, திருவெறும்பூர் பா.ரெஜினா ஆகியோர் கலந்து கொண்டனர். இலால்குடி எனும் சிற்றூரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், 40 நூல்கள் விற்பனை ஆயின.
மாணவர்களுக்குக் கல்வி நிதி
இந்நிகழ்ச்சியில் இலால்குடி சுற்று வட்டார மாணவர்களுக்குக் கல்வி நிதியும், சிறப்பும் செய்யப்பட்டது. இந்நிகழ்வு களில் ஆடிட்டர் டி.மோகன், மேனாள் லயன்ஸ் சங்கத் தலைவர் கே.எம்.நாச்சியப்பன், என்.லோகநாதன், சம்சுதீன், கே.எம்.கிருஷ்ணமூர்த்தி, அப்துல்வாஜித், பி.ஜார்ஜ் மார்டின், பி.விஸ்வநாதன் உள்ளிட்ட பொது மக்க ளும், ஏராளமான கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்டத் துணைச் செயலாளர் சித்தார்த் தன் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார். மாவட்டத் தலைவர் தே.வால்டேர் நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டை செய்ததோடு, பள்ளிக் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கியும், அனைவருக்குமான உணவு ஏற்பாட்டையும் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். வா.குழந்தை தெரசா நன்றி கூறினார்.