ஜம்மு, ஆக.3 பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதேநேரம் அங்கு ஆட்சியை கைப்பற்ற ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் இணைந்த ‘இந்தியா’ கூட்டணியும் தீவிரமாக களத்தில் இறங்கி இருக்கிறது.
இந்த தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 7-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோ சனைக் கூட்டம் ஒன்று டில்லியில் நடப்பதாக தேசிய மாநாடு தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்முவில் நேற்று (2.8.2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து கூறுகையில், ‘பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவரை நான் சந்திக்க உள்ளேன். ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்து தலை வர்களும் வருகிற 7-ஆம் தேதி சந்திக்கிறார்கள். அப்போது அவரிடம் இது குறித்து கேட்டு உண்மையை தெரிந்து கொள்வேன்’ என்றார்.