மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாள்களுக்கு முன்னால், நம்முடைய மானமிகு திராவிடர் கழகத்தின் ஆசிரியர் அய்யா அவர்கள், எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்று அழைக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்! ஏனென்றால், எல்லோருக்கும் உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை இருக்கும்; அதற்காக அவர்களை நோயாளி என்று சொல்லக்கூடாது!
மருத்துவர்களையும் – மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்களை “மருத்துவப் பயனாளிகளாக” நாம் பார்க்க வேண்டும்! இந்த முகாம்களுக்கு வருகின்ற மக்களையும், மருத்துவப் பயனாளிகளாகதான் நீங்கள் பார்க்க வேண்டும்!