மூத்த கல்வியாளர் பேராசிரியர் முனைவர் வசந்திதேவி அவர்கள் தமது 87-ஆம் வயதில் நேற்று (1.8.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணி யாற்றியவர். கல்வி உரிமைச் செயற்பாட்டாளர். பொதுக் கல்விக்கான இயக்கங்களில் ஈடுபட்டு, அவற்றுக்கு ஊக்கம் தந்தவர். தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர், மாநில மகளிர் ஆணையத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியவர்.
கல்வித் துறையின்மீது நிகழும் தொடர் தாக்குதல்கள், தனியார் மயம், காவிப் பாசிசப் போக்குகள், சமூக நீதிக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடியவர். இந்தக் காலகட்டத்தில் அவருடைய மறைவு பேரிழப்பாகும்.
அவருடைய மறைவால் துயருறும் குடும்பத்தினர், தோழர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.8.2025