மாஸ்கோ, ஆக 2- ரஷ்யாவின் கம்சட்கா வட்டாரத்தை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து வெளியான ஒரு காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்தக் காணொலியில், நிலநடுக்கத்தின் தரை அதிர்ந்ததால் மலைமீது ஆங்காங்கே இளைப்பாறிக்கொண்டு இருந்த பெரிய கடற்சிங்கங்கள் பாதுகாப்புக்காகக் அச்சத்துடன் கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அரிய காட்சியை ஒரு சுற்றுலாப் பயணி படம் பிடித்துள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், பாதிக் கப்பட்ட பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் பாது காப்பான இடங்களுக்குச் சென்றனர். எனினும், பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.