ஊழல் குற்றச்சாட்டில் கைதான எதிர்க்கட்சித் தலைவருக்கு பொது மன்னிப்பு இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு

ஜகார்தா, ஆக. 2- ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள இரண்டு எதிர்கட்சியின் முக்கியதலைவர்களை இந்தோனேசியா அதிபர் பிரபோவோ கபியந்தோ பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார்.

பொது மன்னிப்பு

இந்த நிலையில் இவர்கள் இருவரும் அரசின் மக்கள் விரோதக் கொள்கையை விமர்சிக்கமாட்டோம் என்று சிறையிலிருந்து எழுத்துபூர்வமாக கொடுத்ததன் மூலமாக இந்தோனேசிய விடுதலை நாள் விழாவின் போது பொதுமன்னிப்பிற்காக விடுதலை ஆகும் நபர்கள் பெயர்கள் 1115 பேர் கொண்ட பட்டியலில் இவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது  முந்தைய அரசின் நிதி அமைச்சராக இருந்த தாமஸ் திகாசி லெமபோங், மற்றும் எதிர்கட்சி செயலாளர் அசதோ கிறிஸ்டியந்தோ எதிர்கட்சியின் முக்கிய முகமான இவர்கள் தொடர்ந்து அதிபர் பிரபோவோவின் மக்கள் விரோத நடவடிக்கைகள கடுமையாக எதிர்த்துவந்தனர்.

ஊழல் குற்றச்சாட்டு

இந்த நிலையில்  கடந்த ஆண்டு இவர்கள் பதவியில் இருந்த போது ஊழல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.    லெமபோங், அதிபர் தேர்தலில்  தற்போதைய அதிபர் கபியாந்தோவுக்கு எதிராகப் போட்டியிட்ட அனிஸ் பஸ்வேடனுக்கு முக்கிய ஆலோசகராக இருந்தார். கடந்த ஆட்சியில் நிதி அமைச்சராகவும் இருந்தார்.  ஹஸ்தோ இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். இவர்கள் இரு வரையும்  அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி  மன்னிப்பு வழங்கியுள்ளார் பிரபோவோ. இதற்கு இந்தோனீசிய நாடாளு மன்றம் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒப்புதல் அளித்தது.

விடுதலை

இந்தோனீசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நாடாளுமன்ற ஒப்புதலுடன் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. இதனடிப்படையில் இவர்கள் விடுதலயாகின்றனர்.  இந்த நிலையில் முக்கிய எதிர்கட்சியான இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி அதிபரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான விமர்சனம் செய்துள்ளது. ஆளும் அரசிற்கு சாதகமாக பேசினால் அவர்களில் ஊழல் கறைகள் கழுவப்படும் அதன் படி லெமபோங் கூறிய குற்றச்சாட்டுகள் சோப்பு குமிழி போல் காணாமல் போய்விட்டது என்று விமர்சித்துள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *