தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஒசூர் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவரும், 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான என்.எஸ்.மாதேஸ்வரனின் புதிய பொறுப்பு பணி சிறக்க ஒசூர் மக்களுக்கு பயன்பட திராவிடர் கழகம் சார்பில் பயனாடை போர்த்தி பெரியார் நூல் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன், பானு டூல்ஸ் உரிமையாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.