உரத்தநாடு, ஜூன் 12 – 89ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தா சேர்க்கும் பணியினை உரத்த நாடு கடைவீதியிலதிராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தலைமை கழக அமைப்பாளர் க. குருசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. ராம கிருஷ்ணன், ஒன்றிய தி.க தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திரா பதி, மாவட்ட ப.க துணைச் செய லாளர் ஆ. லட்சுமணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரெ.சுப் ரமணியன், மாவட்ட வழக்குரை ஞர் அணி செயலாளர் க. மாரி முத்து, நகர தி.க தலைவர் பேபி ரெ. ரவிச்சந்திரன், நகர தி.க செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், நகர துணைச் செயலாளர் இரா. ராவணன், நகர இளைஞரணி தலைவர் பேபி ரெ. ரமேஷ், தெற்கு பகுதி தி.க செய லாளர் க. சுடர் வேந்தன் ,ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு. குமர வேல், ஒக்கநாடு மேலையூர் கிளைச் செயலாளர் வீர தமிழன் ஒக்கநாடு மேலையூர் கிளை கழகத் தோழர் கள் பொறியாளர் ப. பாலகிருஷ் ணன், மா. தென்னகம், இரா மகேஸ்வரன், வே சக்திவேல் ஆ. ராச காந்தி, மண்டலகோட்டை அ.செந்தில்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.