மேட்டூர், ஜூன் 12 மேட்டூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 10.6.2023 அன்று சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் டி.கே.ராமச்சந்திரன் நினைவு பெரியார் படிப்பகத்தில் காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காப்பாளர்கள் பழனி புள்ளையன்ணன் மற்றும் சிந்தாமணியூர் கவிஞர் சி.சுப்பிரமணி யன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் ப. கலைவாணன் வரவேற்புரை ஆற்றி னார். கழக அமைப்பாளர் கா.நா.பாலு துவக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு பொதுக்குழு தீர்மானத்தின்படி மேட்டூர் மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் , கிளைக் கழகங்கள் தோறும் கொடியேற்றுதல், வைக்கும் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை சிறப்பாகக் கொண்டாடுவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் மேட்டூர் நகர திராவிடர் கழகத்திற்கு கீழ்க்கண்ட புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
நகரத் தலைவர் இரா.கலையரசன், நகர துணைத் தலைவர் கி.உதயபாஸ்கர்; நகரச் செயலாளர் மு.நேரு நகர துணைச்செயலாளர் சி.சீனிவாசன் நகர பொருளாளர் அ. ஜெயக் குமார், நகர அமைப்பாளர்கோ சோமசுந்தரம்..
கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் பங் கேற்றனர்.
பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர்
பெ.சவுந்தரராசன், மேச்சேரி ஒன்றிய தலைவர் வெள்ளார் அ.ப. ராஜேந்திரன், வெள்ளார் கபிலன், இளைஞரணி பொறுப்பாளர் உல.கென்னடி ‘மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அன்புமதி மாவட்ட பகுத்தறி வாளர்கள் செயலாளர் சி.மதியழகன், மேட்டூர் மு.நேரு, இரா.கலையரசன், சி.சீனிவாசன் அ.ஜெயகுமார்.