புதுடில்லி, ஜூலை.31– பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் கேட்டுக்கொண்டது.
குடியுரிமை ஆதாரம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சிறப்பு திருத்தப் பணி தொடர்பான தேர்தல் ஆணையம் உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம், ராஷ்டிரீய ஜனதாதள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா மற்றும் பல அமைப்புகளும், நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இடைக்காலத்
தடை விதிக்க முடியாது
தடை விதிக்க முடியாது
இந்த மனுக்கள், நேற்று (28.7.2025) உச்ச நீதிமன்றத்தில் நீதி பதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தன.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், “வாக்காளர் பட்டியல் இடைக்காலத்திலேயே இறுதியாக்கப்பட்டு விடக்கூடாது. எனவே, ஆகஸ்டு 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு நீதிபதிகள், “மனுதாரர்கள் இடைக்காலத் தடை கேட்கவில்லை என்று கடந்த விசாரணையின்போது கூறினோம். எனவே, இப்போது இடைக்காலத் தடை விதிக்க முடியாது. மனுக்களை ஒரேயடியாக விசாரித்து தீர்வு காண்போம்” என்று கூறினர்.
ரத்து செய்வோம்
கோபால் சங்கரநாராயணன், “ஆகஸ்டு 1-ஆம் தேதிக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி அளித்ததால் தான் இடைக்காலத் தடை கேட்கவில்லை” என்று கூறி னார்.
அதற்கு நீதிபதிகள், “வரைவு வாக்காளர் பட்டியல் வெளியி டப்பட்ட பிறகு கூட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கோர்ட்டின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். நம்பிக்கைவையுங்கள். ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால், அனைத்தையும் நீதிமன்றம் ரத்து செய்யும்” என்று கூறினர்.