கார்பன்டை ஆக்ஸைடை மடைமாற்றும் புதிய முறை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“கார்பன் டை ஆக்ஸைடை உணவாகவும், வேதிப்பொருட்களாகவும் மாற்றுவது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், கார்பன் நடுநிலைமையை அடைய உதவும்” என சயின்ஸ் புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

சீன ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலை வெள்ளை சர்க்கரையாக மாற்றும் புதுமையான முறையைக் கண்டுபிடித்து, கரும்பு அல்லது சர்க்கரை வள்ளி வளர்ப்பதற்கு மாற்றாக ஒரு தீர்வை வழங்கியுள்ளனர்.

உயிரி மாற்ற முறையைப் பயன்படுத்தி, பெறப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடை உணவாக மாற்ற முடியும் என இந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

தியான்ஜின் தொழில்துறை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலில் இருந்து சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) தயாரிக்கும் ஒரு இன் விட்ரோ பயோட்ரான்ஸ்ஃபர்மேஷன் (ivBT) முறையை உருவாக்கியுள்ளனர்.

CO2-அய் உணவாக மாற்றிய சீன விஞ்ஞானிகள்; உலகைத் திருப்பிப் போடும் அறிவியல் கண்டுபிடிப்பு; பின்னணி என்ன?

தொழிற்சாலை கழிவுகள் அல்லது கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து பெறப்படும் மெத்தனாலை நொதிகள் மூலம் சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) ஆக மாற்றுகின்றனர்.

“கார்பன் டை ஆக்ஸைடை உணவாகவும், வேதிப்பொருட்களாகவும் மாற்றுவது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதுடன், கார்பன் நடுநிலைமையை அடைய உதவும்” என சயின்ஸ் புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

2021இல் டாலியன் வேதியியல் இயற்பியல் நிறுவன விஞ்ஞானிகள், கார்பன் டை ஆக்ஸைடை மெத்தனாலாக மாற்றும் முறையை உருவாக்கினர். இதை அடிப்படையாகக் கொண்டு, தியான்ஜின் குழு 86% மாற்று விகிதத்துடன் சுக்ரோஸ் (வெள்ளை சர்க்கரை) மற்றும் மாவுச்சத்து தயாரித்தது. பாரம்பர்ய முறைகளை விடக் குறைவான ஆற்றல் இதற்குப் பயன்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப வெற்றியின் அடிப்படையில், இந்த ivBT முறையை மாற்றி, ஃப்ரக்டோஸ், அமைலோஸ், அமைலோபெக்டின், செல்லோபையோஸ் மற்றும் செல்லோஒலிகோசாக்கரைடுகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உருவாக்க முடிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 10 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், உணவு தேவை இரு மடங்காக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *