கான்பரா, ஜூலை 31- ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் யூடியூப் உட்பட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்து வதற்குத் தடை விதிக் கப்படவுள்ளது.
குழந்தைகளின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் அனிக்கா வெல்ஸ், “பத்து குழந்தைகளில் நான்கு பேர் யூடியூப் தளத்தில் தகாத காணொலிகளைக் கண்டதாகத் தெரிவித் துள்ளனர்,” என்று சுட்டிக்காட்டினார். சமூக ஊடகங்கள் பிள்ளைகளின் மன நலனைப் பாதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்து வதற்குத் தடை விதிக்கும் சட்டங்களை இயற்றுவதாக அறிவித்திருந்தது.
அப்போது, வகுப் பறைகளில் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் என்ற அடிப் படையில் யூடியூப் தளத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
பாதுகாப்பான பிள்ளை வளர்ப்பில் பெற்றோருக்கு அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி வலியுறுத்தியுள்ளார். புதிய தடை வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.