வெட்டிக்காடு,ஜூலை 30– வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 28.07.2025 அன்று நடைபெற்ற குறுவட்ட அளவிலான கபடிப் போட்டி அனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாக கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரு குழுக்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவிகள் குழு வட்டார அளவில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்து மாவட்ட அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு மகிழ்ச்சி அடைந்து முதல் பரிசு பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியையும், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தனர்.