லண்டன், ஜூலை 30– காசாவில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலை மேம்பட இஸ்ரேல் நட வடிக்கை எடுக்காவிட்டால், பாலஸ் தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறும் அய்க்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய ஸ்டாமர், காசாவில் நிலைமை மேம்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். காசாவில் மக்கள் பட்டினி கிடப்பதாக வரும் செய்திகளை ஒட்டி அய்ரோப்பிய நாடுகள் கோபம் அடைந்துள்ளன.
இங்கிலாந்தின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார். இங்கிலாந்து ஹமாஸுக்கு வெகுமதி அளித்து, பாதிக்கப்பட்டவர்களைத் தண்டிப்ப தாக அவர் குற்றம்சாட்டினார். முன்ன தாக, கடந்த வாரம் பிரான்சு நாடும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காசாவின் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, காசாவில் மாண்டவர்களின் எண்ணிக்கை 60,000அய்த் தாண்டிவிட்டது. இந்தச் சூழலில், இங்கிலாந்து பிரதமரின் இந்த அறிவிப்பு பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.