திருப்பத்தூர், ஜூலை 30– திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் ‘கியூ ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.
யாராவது சில்லறை இல்லை என்றால் அக்கவுண்டில் போடு என ‘கியூஆர்.’ கோடு அட்டையை காட்டுகிறார். வித்தியாசமான அவரது இந்த அணுகுமுறையால் பலரும் டிஜிட்டல் முறையில் பிச்சை போட்டு வருகின்றனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர், தற்போது அலைபேசி, கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டுகள்) மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அவர் தான் 3 வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வைத்து இருப்பதாக வும், ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுப்பதாகவும், இதனால் ‘டிஜிட்டல்’ முறையிலேயே பலர் பணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இளைஞர்கள் சிலர் இதை காட்சிப் பதிவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாகி வருகிறது.
தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான நிதி மேலாண்மை திட்டம் அறிமுகம்
சென்னை, ஜூலை 30- தொழில்முனைவோர் வளர்ச்சிக்காக கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் லிமிடெட் மொமென்டம் கருப்பொருளைத் தொடர்ந்து ஓபன் எண்டட் ஈக்விட்டி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் ஃபண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஃபண்ட் ஆனது, சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது.
இதுகுறித்து இந்நிறுவன நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறுகையில், “சந்தைகள் வருவாய்க்கு அடிமை. வரலாற்று ரீதியாக, வருவாய் காளை மற்றும் கரடி நிலைகள் இரண்டிலும் விலையை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த நிலையான முறைதான் எங்கள் நிதியின் அடித்தளமாகும். கோடக் மியூச்சுவல் ஃபண்டில், வெறும் விலை போக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மாதிரியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றார்.
இந்தத் திட்டம் 2025 ஜூலை 29 முதல் 2025 ஆகஸ்ட் 125 வரை பொது சந்தாவிற்கு திறக்கப்படுகிறது. என்எஃப்ஓ (NFO) காலத்தில், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அதன் பிறகு எந்த தொகையையும் முதலீடு செய்யலாம்.
முதலீட்டாளர்கள் இந்த புராடக்ட் அவர்களுக்குப் பொருத்தமானதா என்பது குறித்து சந்தேகம் இருந்தால், தங்கள் நிதி வல்லுநர்கள் மற்றும் வரி ஆலோசகரை அணுகவும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.