‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக காரசார விவாதம் பார்லிமென்ட்டில் நடைபெற்றது. அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 25 பேர் இந்தியர்கள் என பிரியங்கா காந்தி கூறினார். அதற்கு, ‘இந்துக்கள்’ என பாஜக MP-க்கள் கூறினர். இதனை ஏற்க மறுத்த பிரியங்கா ‘இந்தியர்கள்’ என்று மீண்டும் உரக்கக் கூறினார். இதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.