மதுரை, ஜூலை 29 ‘எக்ஸ்’ தளத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,
‘‘இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதத்தை (ரூ.8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட் நகரில் மட்டும் செல விட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டு உள்ளது வெறும் 9.8 சதவீதம் மட்டுமே.
நேற்று வரை ‘வாட் நகர் நாயக னாக’ இருந்து விட்டு இன்று ‘கங்கை கொண்டானாக’ மாறி விட்டதாக நம்பச் சொல்கிறார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.