சண்டிகார், ஜூலை 29- இமாசலப் பிரதே சதத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் குழு ஒன்று வேனில் பஞ்சாபில் உள்ள சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 27.7.2025 அன்று இரவு அவர்கள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக் கிராமப் பகுதியில் வந்தபோது, ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லமுயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த, ஓட்டுநர் உள்பட 30 பக்தர்களும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். அப்போது 8 பக்தர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவர்.
மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.