லக்னோ, ஜூலை 29- உத்தரப்பிரதேசத்தில் கோயில் விழாவில் குரங்குகள் சேட்டையால் மின்கம்பி அறுந்து விழுந்ததால், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பக்தர்கள் பரி தாபமாக செத்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர்.
திருவிழா
உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ளது ஹெடர்கார் சிறுநகரம். இங்குள்ள அவ்சனேஸ்வர் கோவில் சுற்று வட்டாரங்களில் புகழ்பெற்றது. இந்த கோவி லில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. நேற்று (28.7.2025) ‘ஜலாபிஷேகம்’ என்ற விழாவுக்காக பக்தர்கள், நீர் கொண்டு வந்து கொடுத்து, அதன் மூலம் ‘சாமிக்கு அபிஷேகம் நடத்தி வழிபடும்’ நிகழ்வு நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவியில் கூடியிருந்தனர்.
அறுந்து விழுந்த
மின்சாரக் கம்பி
கோயில் வளாகத்தில் பல தகர கொட்ட கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மேலாகச் சென்ற மின்சார வயரில் குரங்குகள் கூட்டமாகச் சேட்டை செய்தபடி சென்றதால், எதிர்பாராமல் மின்சாரக் கம்பி அறுந்து தகர கொட்டகை மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொட்டகையில் மின்சாரம் பாய்ந்த தாகப் பதற்றம் ஏற்பட்டு, பக்தர்கள் சிதறி ஓடியதால், திடீர் நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் கவலைக்கிடம்
இதில் நெரிசலில் சிக்கிய ஏராளமான பக்தர்கள் காயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறலும், மயக்கமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் முபரக்புரா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 22) மற்றும் 30 வயதான பக்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தனர். மேலும் 32 பக்தர்கள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
27.7.2025 அன்று உத்தரகண்டின் ஹரித் வார்சிவாலிக் மலைக் கோவியில், இதுபோல மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து படிக்கட்டுகளில் மின்சாரம் பாய்வதாக வதந்தி பரவி கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 8 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.