நேற்று (28.7.2025) காலை நடைபெற்ற காது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியரின் உடல்நலம் சிறப்பாக இருக்கிறது.
பிரபல காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களும், அவரது மருத்துவக் குழுவினரும் அளித்துவரும் சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இன்று (29.7.2025) காலை சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் அவர்கள், வழக்கம்போல் ஏடுகளைப் படித்தார்; அறிக்கை எழுதினார்; நலமுடன் இருக்கிறார்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.7.2025