தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக
குடியரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்த மனுவை திருப்பி அனுப்ப வேண்டும்!
புதுடில்லி, ஜூலை 29– தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்த மனுவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மசோதாக்கள்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்க ளுக்கு அனுமதி அளிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்ததற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என முதன்முறையாக குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இதை தொடர்ந்து, ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பினார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, “குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழ்நாடு அரசு மனு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குடியரசுத்தலைவர் மூலம் தாக்கல் செய்த மனுவை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல்
ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட சட்ட வழிமுறைகளை சீர்குலைக்கும் வகையில் குடிய ரசுத்தலைவர் மூலம் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் குடியரசுத்தலைவர் மூலம் இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் குறிப்பி டப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மூலம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் விரி வாக பதிலளிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11 கேள்விகளுக்கு
தீர்ப்பிலேயே பதில்
இதேபோன்று கேரள அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், மாநில அரசுகள் நிறை வேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளு நர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது. குடியரசுத் தலைவர் கேட்டுள்ள 14 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு தீர்ப்பிலேயே பதில் உள்ளது.
இந்தத் தீர்ப்பை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு குடியரசுத்தலைவர் எழுப்பிய கேள்விகள், நீதிமன்ற தீர்ப்பை மறைமுகமாக ரத்து செய்ய முயல்வதாக இருக்கிறது. எனவே விளக்கம் கேட்டு குடியரசுத்தலைவர் அனுப்பிய குறிப்பை திருப்பி அனுப்ப வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.