மும்பை, ஜூலை 28 இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும். பணிநீக்க செயல்முறை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி க்ருத்திவாசன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறினார். இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.
புதிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறி வில் ஏற்பட்ட மாற்றங்கள் காரண மாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் தொழில் நுட்பத் துறையில் மொத்தமாக நிகழும் இத்தகைய பணி நீக்கங்கள், தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.