கலிபோர்னியா, ஜூலை 28- அமெரிக்காவின் கலி போர்னியா மாநிலத்தில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோது வதைத் தவிர்க்க முயன்றதில் 2 சிப்பந்திகள் காயமடைந்தனர். இதுவரை பயணிகளுக்குக் காயம் ஏற் பட்டதாகத் தகவல் இல்லை.
இந்தச் சம்பவத்தின் போது, விமானம் திடீ ரென்று கிட்டத்தட்ட 500 அடி கீழே இறங்கியதாக விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு இணையத் தளங்கள் தெரிவித்தன. எனினும், விமானம் பாது காப்பாக லாஸ் வேகாஸ் நகரில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர், சம்பவம் நடந்தபோது அனைவரும் பதற்றமடைந்ததாகத் தெரிவித்தார். மேலும், “நாம் எதிரே வந்த விமானத்தோடு மோதியிருக்கக்கூடும்” என்று விமானி ஒரு வர் பயணிகளிடம் கூறியதாகவும் அவர் குறிப் பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஆயுதப் படை இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. ஒரே வாரத்தில் அமெரிக்கப் பயணிகள் விமானம் எதிர்கொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னர் மார்ச் மாதம் முதல் 3 முறை ராணுவ விமானம் பயணிகள் விமானத்தின் மீது மோதக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.