சியோல், ஜூலை 28- தென் கொரியாவில் தற்போது அனல் பறக் கும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த கடும் வெப்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற, வணிக நிறுவனங்கள் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளன. பொது மக்கள் கடைகளுக்கு வந்து எதுவும் வாங்காமலேயே குளிர்காற்றை வாங்கிச் செல்லும்படி அழைப்பு விடுத்துள்ளன.
நாடு முழுவதும் 18,000க்கும் அதிகமான கடைகளைக் கொண்டுள்ள BGF Retail நிறுவனம் இந்த முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. மக்கள் கடைகளுக்குள் வந்து வெப்பத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பொருளையும் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று அது கூறியுள்ளதாக தி கொரியா ஹெரால்ட் (The Korea Herald) ஊடகம் தெரிவித்துள்ளது.
38 டிகிரி செல்சியஸை
தென் கொரியாவில் இந்த வாரயிறுதியிலும் மிதமிஞ்சிய வெப்பம் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 26 அன்று வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டியது. இரவு நேரத்தில் சற்று தணிந்தாலும், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகப் பதிவாகலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய் வகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடும் வெப் பத்தால் இதுவரை 1,860க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 பேர் உயிரிழந் துள்ளனர் என்று தி கொரியா ஹெரால்ட் கூறியுள்ளது.
இந்தக் கடுமையான வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், முடிந்தவரை குளிர்ச்சியான இடங்களில் தங்கியிருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.