கோலாலம்பூர், ஜூலை 28- மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டத்தாரன் மெர்டேகா (Dataran Merdeka) எனும் சுதந்திரச் சதுக்கத்தில் 26.7.2025 அன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதவி விலகக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த இந்தப் பேரணியில் மேனாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முஹிதீன் யாசின் ஆகியோர் உரையாற் றினர். பிரதமர் அன்வர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்றும், நாட்டில் விலைவாசி அதிகமாக உள்ளது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
கடந்த சுமார் பத்தாண்டுகளில் மலேசி யாவில் பதவியில் இருக்கும் ஒரு பிரதமருக்கு எதிராக நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். எதிர்க்கட்சியான பிஏஎஸ் கட்சி 3,00,000 பேர் கூடுவர் என்று எதிர்பார்த்தது. இருப்பினும், காவல் துறையின் கூற்றுப்படி, சுமார் 15,000 பேர் மட்டுமே திரண்டனர்.