பாங்காக், ஜூலை28- தாய்லாந்துக்கும், கம்போடி யாவுக்கும் இடையே மூன்று நாள்களாக நீடித்து வந்த எல்லை மோதல்கள் முடிவுக்கு வந்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வன்முறை முடிவுக்கு வரும் வரை இவ்விரு நாடுகளுடனான வர்த்த கத்தை நிறுத்தி வைக்கப் போவதாக தான் அச் சுறுத்திய பின்னரே இது சாத்தியமானது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த மூன்று நாள் களாக தாய்லாந்து – கம் போடியா எல்லையில் கடும் சண்டை மூண் டது. இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர் என்றும், 100,000க்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றனர் என்றும் தக வல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் தற்காலி கப் பிரதமர் பும்தாம் விசாயசாய் (Phumtham Wechayachai), அமெரிக்க அதிபரின் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அமைதிப் பேச்சுக்கு தாய்லாந்து கொள்கையளவில் இணங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட விசாயசாய், கம்போடியாவிடமிருந்து உண்மையான கடப் பாட்டைக் காண விரும்பு வதாகவும் கூறினார்.
அமெரிக்காவின் தலையீடும், பொருளா தாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தலும் இந்த அமைதி முயற்சியில் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கருதப்படுகிறது.