தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குக் காதில் ஏற்பட்ட நோய்த் தொற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்த இயலாத நிலை இருந்ததால், இன்று (28.7.2025) காலை 8.30 மணியளவில் காது, மூக்குத் தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் இரண்டு மணிநேரம் காதில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, இன்னும் சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பிறகு இல்லம் திரும்புவார்.
ஆசிரியர் அவர்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், பார்வை யாளர்கள் அவரைச் சந்திப்பதையும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதையும் அருள்கூர்ந்து தவிர்க்க வேண்டுகிறோம்!
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
நலமுடன் உள்ளார் ஆசிரியர்!

Leave a Comment