சென்னை, ஜூன் 14 – தமிழ்நாடு காவல் துறையில், ரோந்துபணிகளை நவீனப்படுத்த, ‘ஸ்மார்ட் காவலர்’ அலைபேசி செயலி மூலம் மின்னணு ரோந்து பணிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று (12.6.2023) காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரிலுள்ள 102 காவல் நிலையங்களுக்கும் 408 கையடக்க கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, அவர் கூறுகையில், ‘‘2023-2024 நிதிநிலை கூட்டத் தொடரில், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் நிலைய விசாரணை அதிகாரிகளுக்கு விசாரணையின் போது வழக்கின் விவரங்களைபதிவு செய்ய வசதியாக பேப்லட் (றிலீணீதீறீமீts) கருவிகள் வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில், சென்னை பெருநகர காவல் விசாரணை அதிகாரிகளுக்கு ரூ.1.12 கோடி செலவில் 450 பேப்லட் சாதனங்கள் விரைவில்வழங்கப்பட உள்ளன’’ என்றார். இந்நிகழ்ச்சியில், சென்னைபெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஜே.லோகநாதன் (தலைமையிடம்), இணை ஆணையர்பி.சாமூண்டீஸ்வரி (தலைமையிடம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.