பீகார் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெளிவாகத் தெரிந்துள்ள தால் பாஜக தேர்தல் வாக்காளர் பட்டியலையே மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இது எனக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை நினைவூட்டுகிறது. ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான பழங்குடியினர் பட்டியலினத்தவர், பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மை யினரின் வாக்குரிமையைப் பறிக்க ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது.
டில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி
தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் டில்லியில் உள்ள ஒவ்வொரு குடிசைவாசிக்கும் ஒரு வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் கடந்த 6 மாதங்களாக பாஜகவின் “இரட்டை இயந்திர” அரசு புல்டோ சர்கள் டில்லியின் ஏழை மக்களின் வீடுகளை ஒன்றன் பின் ஒன்றாக இடித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவோ மொய்த்ரா
அரசியல் சாசன அமைப் பான தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை போல செயல்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போல் பேசுகிறார். தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காண முடியாத வாக்காளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திலி ருந்து கடந்த 24 மணி நேரங்களில் 1 லட்சம் ஆகி இருக்கிறது.