டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, அரி பரந்தாமன் உள்ளிட்ட 10 பேர் ஆதரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நிதிஷ் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டது:. மாநிலத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாத இதுபோன்ற அரசாங்கத்தை ஆதரித்ததற்கு நான் வருத்தப்படுகிறேன்” ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் கடும் தாக்கு.
* கருநாடகா தர்மஸ்தாலாவில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள்; சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘வாக்காளர்கள் மீது கடுமையான மோசடி’: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் குடியுரிமை சரிபார்ப்பு கடந்த கால உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறுகிறது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஓரணியில் தமிழ்நாடு: திமுக இரண்டு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ், 45 நாள்களில் தோராயமாக இரண்டு கோடி வீடுகளைச் சென்றடைய திமுக இலக்கு நிர்ணயித்திருந்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்?’ ‘பீகாரில் 56 லட்சம் சட்டவிரோத வாக்காளர்கள்’ என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்து, மஹுவா மொய்த்ரா அமித்ஷாவுக்கு கேள்வி? பதவியை விட்டு வலகுமாறு வலியுறுத்தல்.
– குடந்தை கருணா