கொழும்பு, ஜூலை 27– இலங்கை யின் வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், “ஹோட்டல் ஷோ கொழும்பு 2025” தொடக்க விழாவில் உரையாற்றுகையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த புதிய முடிவை அறிவித்தார்.
தற்போது, இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இலங் கையில் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விரிவுபடுத்தல்
விசா கட்டண விலக்கு காரணமாக இலங்கை அரசு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் ஏற்படும் மறைமுக பொருளாதார நன்மைகள், இந்த இழப்பை விட அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலவச விசா பெறும் நாடுகள்
இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, நெதர் லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, போலந்து, கஜகஸ்தான், சவூதி அரேபியா, அய்க்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோ னேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், பின்லாந்து, டென்மார்க், கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நார்வே, மற்றும் துருக்கியே ஆகிய 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே விசா இல்லாத பட்டியலில் இருந்த இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளும் இந்த புதிய 40 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.