பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் ஆற்றல்மிகு களப்போராளி முடிகொண்டான் பி.செகநாதன் (வயது 90) இன்று (27.07.2025) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நன்னிலம் ஒன்றிய கழக தலைவர் இரா.தன்ராஜ் மற்றும் கழகத் தோழர்கள் பி.செகநாதன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில் நன்னிலம் அருகிலுள்ள அவருடைய சொந்த ஊரான முடிகொண்டானில் நடைபெற்றது.
– – – – –
தஞ்சை மாநகர கழக பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசனின் மூத்த சகோதரர் வழக்குரைஞர் மைதீன்பாட்சா (வயது 63) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து 25.7.2025 அன்று மாலை 6.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நிறைவுற்றது.
தொடர்புக்கு: கவிஞர் பகுத்தறிவுதாசன், 7402238360