ஷில்லாங், ஜூலை 27- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா 6ஆவது இடத்தில் உள்ளது என்று மேகாலயா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று முன்தினம் (25.7.2025) செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6ஆவது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.அய்.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.அய்.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநில துணை முதலமைச்சர் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.