அமெரிக்காவில் காவல் துறையால் தாக்கப்பட்ட கறுப்பின இளைஞர்

1 Min Read

வாசிங்டன், ஜூலை 27 அமெரிக்காவில் கருப்பின இளைஞரை காவல்துறையினர்  தாக்கிய காணொளி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தில் இருந்த இளைஞரை காவல்துறையினர் விசாரித்த நிலையில் அவர் கார் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தவாறு பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்த காவல்துறையினர்  அவரை அடிக்கத் தொடங்கினர்.

இதில் அந்த இளைஞர் பலத்த காயமடைந்தார். காவல்துறையினர் விசாரிக்கும்போது அந்த இளைஞர் மிகவும் பொறுப்போடு பதிலளிப்பதும், ஆனாலும் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, கொடூரமாகத் தாக்குவதும் இடம் பெற்றுள்ள காணொலி உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

 

உலகின் மனசாட்சியை உலுக்கிய காஸா குழந்தையின் நிழற்படம்

இந்தியா

காஸாவில் நிலவும் மோசமான நிலை மற்றும் அங்குள்ள குழந் தைகள் பட்டினியில் வாடுவதைக் காட்டும் நிழற்படம் உலகையே உலுக்கியுள்ளது. அந்த  நிழற்படத்தை எடுத்த அகமது அல்-அரினி, அதிலுள்ள குழந்தைகள் குறித்தும் காஸாவில் நிலவும் சூழல் குறித்தும் பிபிசிக்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *