மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் மேனாள் தலைவரும், பிரபல கண்மருத்துவருமான பத்மசிறீ பி.நம்பெருமாள்சாமி (வயது86) சென்னையில் இயற்கை எய்தினார். மதுரை அண்ணா நகர் இல்லத்தில் மருத்துவருக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மாநில செயலாளர் சுப.முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன், தியாகராஜன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் செய்தியை கண்மருத்துவர் நாச்சியாரம்மாள் அவர்களிடம் வழங்கினர்.