நாடாளுமன்றத்தில் காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிக்கை!
புதுடில்லி, ஜூலை 26 – நாடாளு மன்றத்தில், காலிப் பணியிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையே, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மனுநீதி கொள்கையை பின்பற்றுவதற்கான ஆதாரம் என, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணிகளுக்காக பழங்குடி யினத்தவர் 83 சதவிகிதமும், ஒபிசி பிரிவில் 80 சதவிகிதமும், பட்டியலினத்தவர் பிரிவில் 64 சதவிகிதமும் காலியாக உள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் அளித்துள்ளது.
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூகவலை தளப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:–
ஒன்றிய பா.ஜ.க. அரசு மனுநீதி கொள்கையை பின்பற்றுவதற் கான ஆதாரம் இந்த அறிக்கைதான் என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கைமூலம்
எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவினர் புறக்கணிக்கப்படுவது அம்பலம் ஆகியுள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மத்திய பல்க லைக்கழங்களில் நடத்தப்படும் கலந்துரையாடல்கள், ஆராய்ச்சி கள்உள்ளிட்டவற்றில் எஸ்.சி.,
எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவினர் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு மனுநீதி சிந்தனையுடன் இருப்பதால், ஆயிரக்கணக்கான எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவினர், நிராகரிக்கப்படு வதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி யுள்ளார்.
இந்த நடைமுறையை ஏற்றுகொள்ளப் போவதில்லை என்றும், உடனடியாக மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர், துணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும், எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. பிரிவினர் தங்களது உரிமைகளை பெற்றிடவேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலி யுறுத்தியுள்ளார்.