டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2006இல் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கைதாகி, மும்பை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் தேர்தலை புறக்கணிப்போம்: தேஜஸ்வி: தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்அய்ஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தேஜஸ்வி அதிரடி அறிவிப்பு.
* தெலங்கானா அரசு மேற்கொண்ட ஜாதிவாரி சர்வே நீதிமன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும், துணை முதலமைச்சர் மல்லு பட்டி நம்பிக்கை.
* பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 4ஆவது நாளாக முடங்கியது.
* “முறைகேடுகளைச் செய்துவிட்டு தப்பித்துவிட முடியும் என தேர்தல் ஆணையம் நினைத்தால் அது நடக்காது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவார்கள்.” என்று ராகுல் காந்தி எச்சரிக்கை.
* தெலங்கானா அரசின் ஜாதிவாரி சர்வே சிறப்பாக நடைபெற்றுள்ளது; இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது, ரேவந்துக்கு ராகுல் பாராட்டு. நாடாளுமன்றத்தில் தெலங்கானா மாடலை ஒன்றிய அரசு பின்பற்ற வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*வாக்காளர் திருத்தம் பிரச்சனையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது குற்றச்சாட்டு: ‘அவர்கள் அரசியலமைப்பின் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முயற்சிக்கிறார்கள்’ என மேனாள் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கண்டனம்.
* ஓபிசி பிரச்சனைகளை புரிந்து கொள்வதில் காங்கிரஸ் ‘தவறிப்போனது’, பாஜகவுக்கு இடத்தைத் திறந்துவிட்டது, ராகுல் காந்தியின் வெளிப்படையான பேச்சு.
தி இந்து:
*மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு; நாடாளுமன்றத்தில் சட்டப்பூர்வ தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முன்மொழிகிறார்
தி டெலிகிராப்:
* உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளில், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது; ஒன்றிய அரசு ஒப்புதல். “2018 முதல் ஜூலை 21 வரை நியமிக்கப்பட்ட 743 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், 23 பேர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 93 பேர் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள். ஜூலை 21, 2025 நிலவரப்படி, ஒரு பெண் நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிகிறார், மேலும் 105 பெண் நீதிபதிகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணிபுரிகிறார்கள்” என சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 52% காலியிடங்களுக்கு உயர்நீதிமன்றக் கல்லூரிகளி லிருந்து பெயர்கள் இல்லை: உயர் நீதிமன்றங்களில் 371 நீதிபதிகள் காலியாக உள்ளது. உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த பரிந்துரையும் செய்யவில்லை, அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.
– குடந்தை கருணா