சென்னை, ஜூலை.25- அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த பாடத்திட் டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக பாடவேளையை ஒதுக்கி, கற்றுக்கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
‘டி.என்.ஸ்பார்க்’
மாணவர்களுக்கு கணினி சார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வண்ணம் பாடத் திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியும், மாணவர் களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படைத் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இதனை செயல்படுத் தும். விதமாக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. இதனை துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டா லின் வெளியிட்டார்.
இந்த பாடப்புத்தகத் துக்கு “டி.என்.ஸ்பார்க்” என பெயரிடப்பட்டிருக் கிறது. அதாவது, “தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் அறிவு, ஆன்லைன் கருவிகள் திட்டம்” என்பதாகும்.
தனி நேரம்
அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்புமுதல் 9-ஆம் வகுப்புவரை படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக், கணினி அறிவியல் சார்ந்த பாடங்கள் தூய தமிழில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்து இருக்கிறது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்த துறை களில் சிறந்து விளங்கிய பாட வல்லுனர்கள், நிபு ணர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரின் முயற்சியால் இந்த பாடப்புத்தகங்கள் வெளியாகியுள்ளது.
6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக இந்த பாடத் திட்டங்களுடன் பாடப்புத்தகங்கள் வடிவ மைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்க ளுக்கு கற்பித்தல் பணி மேற்கொள்வதற்காக தனியாக பாடவேளை ஒதுக்கவும், அதில் வேறு எந்த பாடங்களையும் நடத் தாமல் இந்த பாடங்கள் பற்றிய புரிதலை மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கவும் கல்வித்துறை உத்தரவிட்டி ருக்கிறது.
திறன் இயக்கம்
இதேபோல், மொழிப் பாடம், கணிதத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகளை அடை யாளம் கண்டு அவர் களின் திறனை மேம் படுத்துவதற்காக திறன் இயக்கம் தொடங்கப்பட் டிருக்கிறது. இதற்கான பாடப் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர் களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு அவர்களையும் மற்ற மாணவர்களுக்கு நிகராக கொண்டு வருவதற்கான முயற்சிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.