இப்படியும் ஒரு மோசடியா? உத்திரப்பிரதேசத்தில் இல்லாத நாட்டின் பெயரில் போலி தூதரகம் நடத்திய மோசடி மன்னன் கைது

3 Min Read

லக்னோ, ஜுலை 24- உத்திர பிரதேசத்தில் இல்லாத நாட்டிற்கு தூதரகம் ஒன்றை அமைத்து அதை நடந்தி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி தூதரகம்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவி நகர் பகுதியில், ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவர் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இவர் இந்த வீட்டில் தங்கியிருக்கவில்லை. மாறாக வீட்டை அலுவலகமாக மாற்றியிருக்கிறார். வீட்டிற்கு வெளியில் ‘வெஸ்ட் அண்டார்டிகாவின் தூதர் ‘ என்று பெரிய போர்டு ஒன்றை மாட்டி உள்ளார்.

ஆடம்பர கார்களில் அவர் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து போவதை அக்கம் பக்கத்து மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹர்ஷ் வர்தன், இங்கிருந்துக்கொண்டு போலி ஆவணங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலம் மோசடி செய்து வந்திருக்கிறார். உண்மையில் ‘வெஸ்ட் அண்டார்டிகா’ என ஒரு நாடே கிடையாது.

இல்லாத ஒரு நாட்டை இருப்ப தாகவும், அதற்கான தூதர் நான்தான் என்றும் ஹர்ஷ் வரதன் கூறி வந்திருக்கிறார். இது மட்டுமல்லாது செபோர்கா, லடோனியா மற்றும் போல்வியா போன்ற கற்பனையான நாடுகளின் பிரதிநிதியாகவும் தாம் இருப்பதாக கூறி வந்துள்ளார். உயர் அதிகாரிகள் மற்றும் பிரதமர்கள், அதிபர்களுடன் மார்பிங் செய்யப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் போலி முத்திரைகள் அடங்கிய ஆவணங்களை காண்பித்து, தான் ஒரு பெரிய பன்னாட்டு முக்கிய பிரமுகர் என்பதைப் போல அவர் வெளி உலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

இதன் மூலம், தொழிலதிபர்களை ஏமாற்றி, பன்னாட்டு சந்தைகளில் முதலீடு செய்ய உதவுவதாக கூறி ஹவாலா நெட்வொர்க் நடத்தி வந்துள்ளார். இது மட்டுமல்லாது, வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு விசாவிற்கு முயற்சி செய்பவர்களை குறிவைத்து, போலியான தூதரகம் மூலம் பன்னாட்டு அளவில் தனக்கு ஒரு நம்பகமான அடையாளத்தை உருவாக்கி மோசடி செய்து வந்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த உள்ளூர் மக்கள் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து தகவல் அறிந்து ஹர்ஷ் வரதன் வீட்டை சோதனையிட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணையில் போலி தூதரகம் நடத்தி வருவது வந்திருக்கிறது.

ஹர்ஷ் வரதனிடமிருந்து, போலி நம்பர் பிளேட் கொண்ட நான்கு வாகனங்கள், 18 போலி தூதரக நம்பர் பிளேட்டுகள், 12 போலி தூதரக கடவுச்சீட்டுகள், வெளிவிவகார அமைச்சகத்தின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்கள், இரண்டு போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகளின் 34 முத்திரைகள், இரண்டு போலி பத்திரிகை அட்டைகள், ரூ. 44.7 லட்சம் பணம் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளுக்காக பயன் படுத்தப்பட்ட பல கம்பெனிகளின் வணிக ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஹர்ஷ் வரதன், இதுபோன்ற மோசடியில் சிக்குவது இது முதல் முறையல்ல என்பது காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்ததற்காக காசியாபாத் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் மறைந்த சாமியார் சந்திராசாமி மற்றும் பன்னாட்டு ஆயுத வியாபாரி அத்னான் கஷோகி ஆகியோருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலியான தூதரகம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் உ.பி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *