சென்னை, ஜூன் 15 – அண்ணா நகரில் நேற்று (14.6.2023) நடைபெற்ற ம.தி.மு.க.வின் 29ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான வைகோவுக்கு கட்சி நிர்வாகிகள் செங்கோல் வழங்கி வாழ்த்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும் பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையொப்ப இயக்கம் நடத்துவது என அப்பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ம.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நியூ ஆவடி சாலையில் உள்ள விஜயசிறீ மஹாலில் நடைபெற்றது. ம.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில், பொதுச் செயலாளராக வைகோவும், அவைத் தலை வராக அர்ஜுனராஜ், பொருளாளராக மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளராக துரை வைகோவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், துணைப் பொதுச் செயலர்களாக மல்லை சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராஜேந் திரன், ரொஹையா சேக் முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, முறைப்படி அறிவிக்கப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளராக வைகோ 5ஆம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உள்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற காலத்தி லிருந்து அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து போட்டி அரசு நடத்திக்கொண்டிருக்கிறார். அரசமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரத்தை மீறி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்கம் செய்ய நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் தராமல் அதை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்து விட்டார். அவரைக் குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் மக்களிடத்தில் தமிழ்நாடு முழுவதும் கையொப்ப இயக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்டன.