சென்னை, ஜூலை 23 தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விஞ்சி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில்,
“மக்கள் நலனை மய்யப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் நமது அரசு கவனம் செலுத்தியதால் இவை சாத்தியமானது. இதே உற்சாகத்தோடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி இன்னும் வேகமாகப் பயணிப்போம்! அடுத்து வரவுள்ள DravidianModel 2.0இல் முதல் மாநிலமாக உயருவோம்!” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.