சேலத்தில் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

1 Min Read

கடந்த 17.7.2025 அன்று சேலம் அரசு கலைக் கல்லூரி  வாசலில் ஆசிரியர் அவர்களின் “சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2533 கோடி, தமிழ் உள்ளிட்ட தென்னாட்டு 5 மொழிகளுக்கு 147 கோடி மட்டுமே!” துண்டறிக்கைகள் 1000 சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் சு இமயவரம்பன், பின்னர் 18.7.2025 அன்று மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ,  மாவட்ட செயலாளர் சி பூபதி, சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, மாணவர் கழக யமுனா தேவி ஆகியோர் மாணவர்களுக்கு கொடுத்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

21-07-2025 அன்று காலை மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, அம்மாப்பேட்டை பகுதி செயலாளர் சு.இமயவரம்பனும், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ.பரமசிவமும், சேலம் சோனா கல்லூரி வாசலில் ஆசிரியர் அறிக்கை 5000த்துடன், கல்வி வள்ளல் காமராஜ் அவர்களின் “ கடவுள், மதம், திருவிழா,சடங்கு, சம்பிரதாயம்“ தலைப்பில் ஒரு நாளேட்டில் வெளிவந்த பேட்டியின் நகல் 5000அய் மாணவர்களிடையே கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அன்று மதியம் வாசலிலும், 22.7.2025 அன்று காலை “சோனா கல்லூரியிலும் பேருந்து நிலையத்திலும் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு ஆசிரியரின் துண்டறிக்கையையும், கர்மவீரர் காமராசர் பேட்டி நகலையும் மாணவர்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வை ஊட்டினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *