கடவுளை நம்பிய பக்தர்களின் கதி! வைஷ்ணவி தேவி கைவிட்டாளே! சென்னை பக்தர் பலி – 10 பேர் படுகாயம்

1 Min Read

ஜம்மு, ஜூலை 23- ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட் டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது.

யாத்திரை தொடங்கு மிடம் என்பதால், பக்தா்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவர்களை அழைத்துச் செல்லும் பணியாளா்களும் திரளாக கூடியிருந்தனா். நிலச்சரிவில் இப்பணியா ளர்களின் பதிவு அலு வலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடி பாடுகளில் சிக்கி 10 போ் காயமடைந்தனா்.

சென்னையைச் சோ்ந்த பக்தா் உப்பன் சிறீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), அரியாணாவைச் சோ்ந்த ராஜீந்தா் பல்லா (70) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் சிறீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரி ழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற இரு வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப் புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோவில் வாரியத் தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமாா் வைஷியா தெரிவித்தாா்.

நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும் பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்ச உமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *