சென்னை, ஜூலை 22 காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவீற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆங்கில வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவும், பிளவுகளை விதைக்கவும், முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக உறுதியாக நின்று இந்தியா கூட்டணியை பலப்படுத் துவதில் நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். மேலும் மக்களின் உரிமைகளையும், அரசமைப்பின் மாண்பையும் பாதுகாக்க மன உறுதியோடு நல்ல ஆரோக்கியம் பெற்றும் வாழவேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.