சென்னை, ஜூலை 22- தமிழ்நாடு அரசு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பல்வேறு உயரிய விருதுகளுக்குத் தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதில் 2026 ஆம் ஆண்டுக்கான “திருவள்ளுவர் விருது” (ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம்), 2025 ஆம் ஆண்டுக்கான “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” (ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு), “இலக்கிய மாமணி விருது” (ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு), “தமிழ்த்தாய் விருது” (ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு), “கபிலர் விருது” (ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு) உள்ளிட்ட மொத்தம் “73 விருதுகள்” அடங்கும்.
விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான “www.tamilvalarchithurai.tn.gov.in/awards”, “[http://awards.tn.gov.in](http://awards.tn.gov.in)”, மற்றும் “www.tamilvalarchithurai.tn.gov.in”ஆகிய முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தகவலை தமிழ் வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.