பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டி தரப்படும் கரூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai
3 Min Read

கரூர், ஜூலை 21- கரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் கலந்துரையாடல் கூட்டம் கரூர் காந்திகிராமம் இளைஞரணி தோழர் ராஜாஇல்லத்தில் 20-7-2025 அன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் கவிஞர் கவி அருட்செல்வன்  தலைமையில் நடைபெற்றன. கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, மாவட்ட காப்பாளர் வே ராஜு, மாவட்டச் செயலாளர் ம.காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் சே. அன்பு, கட்டளை உ. வைரவன், ம.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, செந்துறை அறிவன் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆகியோர் இளைஞர் அணியின் செயல்பாடுகள், புதிய இளைஞர்கள் சேர்ப்பு, பெரியார் உலகம் நிதி, விடுதலை உண்மை சந்தாக்கள் சேர்த்து புதுப்பித்தல், செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு குடிஅரசு நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தி லிருந்து ஏராளமான தோழர்கள் கலந்து கொள்வது எனவும்,  கட்சியின் பொதுக்கூட்டம் தெரு முனை கூட்டம் நடத்துதல் குறித்து மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி சிறப்புரையாற்றினர்.

 தீர்மானங்கள்

தலைமை செயற்குழு மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானத்தின்படி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருசக்கர வாகன பேரணி சென்று பேரணி முடிவில் கழக பொதுக்கூட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டன.

புதிய இளைஞர் அணி சேர்க்கையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் முனைப்புடன் செயல்படுமாறு கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது

கழகத் தோழர்கள் அனைவரும் கட்டாயம் கழக ஏடுகளான விடுதலைக்கு சந்தா சேர்த்து மற்றவர்களிடம் சந்தா சேர்க்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கழகத் தலைவரின் மிகப்பெரிய அளவில் தந்தை பெரியார் உலகமயம் ஆக்கி வரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் உலகம் அத்திட்டத்திற்கு கரூர் மாவட்ட தோழர்கள் பெருமளவில் நிதி திரட்டி தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் பேசிய கருத்து களை மக்களிடம் பிரச்சாரமாக மேற்கொள்ள ஓர் ஏற்பாடாக தகவல் பலகை ஒன்றை வைப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பட்ட முதல் சுயமரியாதை இயக்க மாநாடு 1925 இல் செங்கல்பட்டில் நடைபெற்றதை நினைவு கூறும் வகையில் வரவிருக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டின் நிறைவு விழா மற்றும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாவிற்கு கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இக்கலந்துரையாடல்  கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மா ராமசாமி தலைவர் கலை இலக்கிய அணி, சு பழனிச்சாமி கரூர் ஒன்றிய தலைவர், எம் வடிவேல் கரூர் நகர கழக பொறுப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் பி இராமலிங்கம், தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் மா. கணேசன், இரா. பெருமாள் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர், இளைஞர் அணி ம. சபாபதி, காந்திகிராமம் ச. ராஜா நகர இளைஞரணி தலைவர், ரா,கவின் மாவட்ட மாணவர் கழக தலைவர், அம்பிகா மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், தே. அலெக்ஸாண்டர் கரூர் மாவட்ட துணைச் செயலாளர், மாணவர் கழக  கெவின் மோசஸ், பெரியார் செல்வம் மாவட்ட இளைஞரணி செயலாளர், கா வீர முரசு காந்திகிராமம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காந்திகிராமம் குமார், கார்த்தி கடவூர் ஒன்றிய செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர். நிகழ்வின் இறுதியாக பெரியார் செல்வம் இளைஞர் அணி செயலாளர் நன்றி உரை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *