ஆவடி, ஜூலை 21- நேற்று (20.7.2025) 04-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் அயப்பாக்கம் அரிகிருட்டிணன் கடவுள் மறுப்பு கூற ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் வரவேற்புரையுடன் மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
முதலில் பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து, திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதிக் காத்து மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் ஆவடி மாவட்ட கழக 2025 ஆண்டிற்கான ஆறு மாத மாதாந்திர வளர்ச்சி நிதி வரவு – செலவு கணக்கு ஒப்படைக்கப்பட்டது. அடுத்ததாக பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவதாக அறிவித்த தோழர்கள் மாவட்ட தலைவர்- செயலாளர் அவர்களிடம் வழங்கினர்.
அதேபோல் செங்கல் பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வெற்றிகரமாக நடைபெற தீவிரமாக பாடுபடுதல் . இவற்றை விளக்கி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் உரையாற்றினார். ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் சி.ஜெயந்தி, கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை, மதுரவாயல் லலிதா,அம்பத்தூர் வசந்தா, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செயலாளர் க.கார்த்திக் கேயன், துணைத்தலைவர் ஜெயராமன்,ஆவடி மாவட்ட கழக துணைத் தலைவர் வை.கலையரசன், ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன்,அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன்,சு.சிவகுமார்,பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன்,முகப்பேர் முரளி, ஆவடி புருசோத்தமன், சுந்தர்ராஜன்,நடராஜன் எச்.பி.எப். பாசறை கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆவடி மாவட்ட திராவிட.ர் கழக துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.