நியூயார்க், ஜூலை 21- 2025 ஏப்ரலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது, அய்க்கிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “அய்ந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” எனக் கூறியுள்ளார்.
ஏவுகணைகள், ட்ரோன்கள்
ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையே சண்டை மூண்டது. இந்தியா “Operation Sindoor” எனும் நடவடிக்கையின் கீழ் மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போர் விமானங்கள், ஏவு கணைகள், ட்ரோன்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தான், அய்ந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. பாகிஸ்தானின் சில விமானங்களை வீழ்த்தி யதாக இந்தியா அறி வித்தது. ஆனால், பாகிஸ் தான் தனது விமானங்கள் வீழ்த்தப்பட்டதை மறுத்தது.
மே 10ஆம் தேதி இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்பந்தத்தில் இணங்கின. இந்த சண்டை நிறுத்தத்திற்கு தாம் உதவியதாகத் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். “இரு அணுஆயுத நாடுகள் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்துவோம் என எச்சரித்ததன் மூலம் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தோம்” என அவர் தெரிவித்தார். இந்திய அரசு, சண்டை நிறுத்தம் இருதரப்புகளின் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்பட்டதாகவும், அமெரிக்காவின் தலையீடு இல்லை எனவும் தெரிவித் திருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்காக நடந்த விருந்தில் அய்ந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.