கீவ், ஜூலை 20- ரஷ்யா, உக்ரைன் மீது 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடேசா நகர மேயர் ஹென்னாடி ட்ருக்கானோவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அய்ந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதுகுறித்து தெரிவிக்கையில், ஒடேசா தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.