தியாகம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி யினரை வசை பாடுவது எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரி வித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என கூறிய அதி மேதாவி எடப்பாடி பழனி சாமி எனவும். அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது என்றார்.
மராட்டியத்தில்
ஹிந்தி எதிர்ப்பு வேகம் எடுக்கிறது
மும்பை, ஜூலை 20 ஹிந்தி மொழிக்கு எதிரான விவகாரத்தில் ராஜ்தாக்கரே மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மராட்டியத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஹிந்தி மொழி மற்றும் மராத்தி மொழி இடையே நிறைய சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்தி ெமாழி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உத்தவ்தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே இணைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாநில அரசு ஹிந்தி மொழி அரசாணையை திரும்பப் பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் (18.7.2025) தானே மாவட்டம் மிராபயந்தரில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது ஹிந்தி மொழி திணிக்கப்பட்டால் பள்ளிகளை மூடுவோம் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.
‘‘மராட்டியத்தில் வாழ வேண்டுமெனில் மராத்தியை கற்று கொள். இல்லையெனில் உங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இவரது பேச்சு மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராஜ்தாக்கரேவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் கன்ஷ்யாம் உபாத்யாய் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளாராம். மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்பு வேகம் எடுத்துள்ளதற்கு இது சாட்சியமாகிறது.